Skip to content

பன்னாட்டுச் சந்தையில் பாரதமாதா

மு. சங்கையா எழுதிய பன்னாட்டுச் சந்தையில் பாரதமாதா - இந்தியச் சந்தையின் சுரண்டல், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம், பொருளாதாரச் சவால்களைப் பற்றி அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher சிந்தன் புக்ஸ்
Language தமிழ்
Pages 238
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

வியாபாரம் செய்ய வந்தவனிடம் 200 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த வரலாறு நம்முடையது. நமது செல்வங்களும் உழைப்பும் சுரண்டப்பட்டு பிரிட்டன் செழித்து வளர்ந்ததை போலவே பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடலில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் செழித்து வளர்வதோடு அவைகள் இந்தியாவை மறுகாலனியாகவும் மாற்றி வருகிறது.

கஜினியும், கோரியும், தைமூரும் மலை கடந்து காடு கடந்து, நதி கடந்து வெறி பிடித்த படைகளோடு வந்து எதிர்த்துப் போரிட்ட மானமுள்ள மன்னர்களின் தலைகளை எல்லாம் வெட்டி எறிந்துவிட்டு பிணக்குவியல்களின் மீதேறி கொள்ளையடித்துச் சென்ற வரலாறு இன்றும் தொடர்கிறது. ஆனால் அமைதியாக.

பன்னாட்டு கம்பெனிகளுக்குப் படைகள் இல்லை. பீரங்கிகள் இல்லை, குதிரைகளின் குளம்படிச் சத்தம் இல்லை. ஆள்பவர்களே மீர்ஜாபர்களாகி விட்டதால் யுத்தமும் இல்லை, இரத்தமும் இல்லை. விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளத்தில் கம்பீரமாய் நடந்து வந்து விருந்துண்டு தேவையானவற்றை அள்ளிச் செல்கின்றனர்.

இதைத் தான் வளர்ச்சி என்றும், இது தான் தேச பக்தி என்றும், நம்பச் சொல்கிறார்கள். எதிர்ப்பவர்கள் மீது நாடு வல்லரசு ஆவதைத் தடுக்க நினைக்கும் சதிகாரர்கள் என்று நம்மைப் பார்த்து குற்றமும் சுமத்துகிறார்கள்...