நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்
வெற்றிப் படிகளில் ஏற்றிவிடும் ஏணி
ம. லெனின் எழுதிய நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம் - தொழில் தொடங்கவும், செல்வத்தை ஈட்டவும் உதவும் வழிகாட்டி! திட்டமிடல் மற்றும் இலக்கை அடைய உதவும் புத்தகம்.
| Category | Manual |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 132 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
உங்கள் வாழ்வில் நீங்கள் எத்தனையோ நுழைவுத் தேர்வுகளை சந்தித்திருப்பீர்கள். அனால் நிச்சயமாக இப்படியொரு தேர்வை நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டீர்கள்.
இலக்கை அடைவதற்கு அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக் கொள்வது எப்படி? திட்டமிடுவது எப்படி?முன்னேறுவது எப்படி? என்ற உங்கள் கேள்விக்கெல்லாம் யாரோ எழுதி வைத்ததை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் தேர்வு இல்லை இது.
இந்தத் தேர்வுக்கு நீங்கள் எதையும் பாடமாகப் படிக்க வேண்டியதில்லை. படித்துப் பயிற்சி செய்த பிறகே எழுத வேண்டும் என்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தத் தேர்வில் நீங்கள்
தோல்வி என்பதே அடையப்போவதில்லை.
ஏனென்றால் இது உங்களுக்காக நீங்களே நடத்திக் கொள்ள வேண்டிய தேர்வு. இதில் எப்போதும் உங்களுக்கு நூற்றுக்கு நூறுதான்.