Skip to content

கமலஹாசனும் காளிமுத்துவும்

கனவுகள் உதிரும் காலம்

ஜி. ஆர். சுரேந்தர்நாத் எழுதிய கமலஹாசனும் காளிமுத்துவும் - வாழ்க்கையின் சுவாரஸ்யமான கதைகள், கனவுகள், இழப்புகள் மற்றும் மனித உறவுகளைப் பற்றி அறிய சிறந்த புத்தகம்.

Category Short Story
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 224
Year 2009
Format Paperback
Tags Life and Society

Description

காலம் கலைத்து வீசிய கனவுகளே வாழ்க்கை. கனவுகள் கைநழுவும் நேரமும், அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலுமே நமது வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கிறது. அந்த சுவாரஸ்யத்தில் சிலவற்றையே கதைகளாக்கியுள்ளார் ஆசிரியர் , ஜீ.ஆர்.சுரேந்தர்நாத்.

இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள், தங்கள் கனவுகள் பொய்ப்பட்ட தருணங்களை நம் சக மனிதர்கள் எதிர்கொண்ட நிகழ்வுகளே ஆகும். இளமையின் கொண்டாட்டம், முதுமையின் தனிமை, காதலின் தவிப்பு, தாய்மையின் பரிவு.. என்று பலவற்றையும் இக்கதைகளில் காணலாம்.