கல்பனா சாவ்லா
விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை
ம. லெனின் எழுதிய கல்பனா சாவ்லா - இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீரரின் உத்வேகமான கதை! தடைகளைத் தகர்த்து சாதனை புரியும் கல்பனாவின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2003 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
தன் தகுதி ஒன்றையே துணையாகக் கொண்டு விண்ணுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா. அவருடைய சரித்திரம் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய ஒன்றாகும்.
நம் நாட்டில் எத்தனையோ கல்பனா சாவ்லாக்கள் மறைந்து கிடக்கலாம்.அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதற்கு அவர்களுக்கு இந்நூல் வழி காட்டும். ஆண், பெண் அனைவரும் கல்பனாவின் கதையைப் படித்தால் ஒரு தெளிவு பிறக்கும் அவரைப்போலவே தடைகளை உடைக்கும் எண்ணம் வளரும்.
நோக்கங்களை எவ்வளவு உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை உருவாகும். போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்ற பாகுபாடுகள் எல்லாம் மறைந்து வெகு காலமாகிவிட்டது.
இன்று ஒருவரிடமுள்ள திறமைகளும், தனித்தகுதிகளுமே அவர்களை அளக்க உதவும் அளவுக்கோல். இந்தியப் பெண்கள் என்றாலே உலகம் இளக்காரமாக நினைத்து கொண்டிருந்த நேரத்தில் தன் தகுதி ஒன்றையே துணையாகக் கொண்டு விண்ணுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா.