கசபத் (நாவல்)
சாளை பஷீர் எழுதிய கசபத் (நாவல்) - வாழ்வின் அர்த்தம், அபத்தங்கள் மற்றும் மனித உணர்வுகளைத் தேடும் ஒரு தத்துவார்த்தப் பயணம். நாவல், வாழ்க்கை குறித்த புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 136 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
ஈர்க்கப்படும் பொருட்களுக்கும் புவியீர்ப்பு விசைக்கும் ஆன முடிவற்ற போராட்டம்தான் வாழ்க்கை. சராசரி பெரு ஓட்டமானது, தான் காணும் எல்லாவற்றின் மீதும் தனது வண்ணத்தைப் பூசிவிட எத்தனிக்கிறது; தன்னில் ஒன்றாகச் செரித்து தனது மாறாத குற்ற உணர்வைச் சமன்படுத்தத் துடிக்கிறது.
எனினும், வட்டங்களுக்குள்ளும் சதுரங்களுக்குள்ளும் அடங்க மறுக்கும் 'அபத்தங்களை' நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் நம்மிடம் இருக்கும் இலக்கணங்களைக் கலைத்துப் போட வேண்டி இருக்கிறது. வாழ்வின் வெற்றி, தோல்வி பற்றிய வரையறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது.
இந்நாவலில் விரியும் வாழ்வு அதைத்தான் செய்கிறது.