வீடும் உறவும்
மன்சூரா பீவி எழுதிய வீடும் உறவும் - குடும்ப உறவுகளின் ஆழத்தையும், மலைவாழ் மக்களின் துயரத்தையும் உணர்த்தும் சிறந்த நாவல். வீட்டின் முக்கியத்துவத்தை அறியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
Description
படிப்பவர்க்கு ஒரு புத்தகம் அவர் வாழ்ந்திராத ஒரு வாழ்வைக் காட்ட வேண்டும்; அப்படி வாழ்ந்த உணர்வைக் கொடுக்க வேண்டும். அதுவரை கற்றிருந்த வாழ்வியல் கல்வியை ஒரு படி உயர்த்தவும் மனத்தைச் செம்மைப்படுத்தவும் பண்படுத்தவும் வேண்டும். அதைச் செவ்வனே செய்கிறது இப்புத்தகம்.
தேயிலைத் தோட்டம் அமைக்கும் முன் அம்மலைப் பகுதிக்குச் சமதளத்தில் இருந்து பிழைப்புத் தேடிச் சென்ற மக்களின் புலம்பெயர் துயர் விளக்கும் சொற்கள் நெஞ்சைச் சுட்டன, அதுவரை உணவு உடை உறையுள் தந்த தம்மூரைப் பஞ்சத்தின் கொடுமையிலும் நீங்கிச் செல்ல உடன்படாத தம் கால்களைப் பிடுங்கி எடுத்துச் சென்றனராம்.
மலைவாழ்வைத் தொழில்நுட்பம் மிகு இக்காலத்திலும் எல்லாரும் எளிதில் ஏற்று வாழ்வோமா? மரங்களடர் காடாக இருந்த மலைப்பகுதி, மக்கள் வாழிடமாக மாற உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டிய அக்கால நிலையை நம்மால் எண்ணிப் பார்த்துணர இயலுமா? அந்நிலையிலும் கடுமையாக உழைத்ததோடல்லாமல் தனிவாழ்விலும் மான உணர்வுடன் அறம் பிறழாமல் வாழ்ந்தவர்களைக் கொண்டாடும் புத்தகம் இது.
-சேதுபாலா
மென்பொருள் பொறியாளர், நெல்லை