Skip to content

தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம்

தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம் - தஞ்சை வரலாறு, தெருக்கள், சந்துகள் குறித்த அரிய தகவல்கள் மற்றும் ஆய்வுகளைக் கொண்டுள்ளது.

Category History
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சோழர் கால தஞ்சாவூர் பேசப்படுகின்ற அளவிற்கு, நாயக்கர், மராட்டிய மன்னர் கால தஞ்சை கோட்டைப் பகுதிகள் ஆய்வு செய்யப்படவில்லை. குறிப்பாகத் தஞ்சை கோட்டையின் உள்ளும், புறமும் உள்ள ராஜவீதிகளும், சாமான்யர்கள் வாழ்விடமான தெருக்களும் குறுகலான சந்துகளும் ஆய்வாளர்கள் கவனத்தைப் பெறவில்லை. "தஞ்சாவூர் சந்துகளில் சென்றால் பச்சைக் குதிரைத் தாண்டித்தான் ஒருவரை ஒருவர் கடந்து செல்ல முடியும்".

தஞ்சாவூர்க் கவிராயர், இளமையில் தஞ்சை கோட்டை சந்துகளின் கனவுகளையும் கற்பனைகளையும் சுமந்து வாழ்ந்தவர். அவற்றின் வண்ணக்கலவை வாசனையை தன் எண்ணங்களில் சுமந்தவர். தஞ்சை மண்ணிற்கு தான் ஆற்றவேண்டிய ஒரு பெரும் கடமையாக எண்ணி, நெஞ்சக் கூட்டில் அடைந்து கிடந்த தஞ்சை சந்துகளுக்கு தன் எழுத்தால், புது வடிவமும் வரலாறும் வழங்கி இருக்கிறார்.

தஞ்சை மண்ணின் மைந்தர்களுக்கே மறந்துபோன, மனதில் இருந்து மறைந்து போன சந்துகளின் கதைகளைச் சுவைபட ஒரு சாமான்யன் மற்றொரு சாமான்யனுக்குச் சொல்வதுபோல் எளிமையாகப் பதிவு செய்திருக்கிறார். தஞ்சாவூரின் சின்னஞ்சிறு சந்துகளில் தவழ்ந்து வளர்ந்து வானந்தொட்ட பன்முகத்திறன் கொண்ட ஆளுமைகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத் தியிருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் ஒன்றின் தெருக்கள், குளங்கள், சந்துகள் பற்றிய முதல் ஆய்வு என்ற பெருமையை கவிராயரின் கை வண்ணம் பெறுகிறது.