தமிழகம் ஊரும் பேரும் (சந்தியா பதிப்பகம்)
ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய தமிழகம் ஊரும் பேரும் - தமிழ்நாட்டின் வரலாறு, ஊர்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள். ஊர் மற்றும் பெயர் பற்றிய தகவல்கள் இங்கே!
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
'ஊரும் பேரும்' என்னும் இந்நூல் வரலாற்றின்பாற்பட்டது. இவ்வரலாறு தமிழ்நாட்டின் ஊரையும் பேரையும் விளக்குங் கலங்கரை.
'ஊரும் பேரும்' என்னுந் தலைப்பு விழுமியது. அஃது ஆழ்ந்த பொருண்மையுடையது; சுரங்கம் போன்றது.
வாழ்க்கைக்குப் பல துறைகள் தேவை. அவற்றுள் ஆவி போன்றவை ஊரும் பேரும். ஊரும் பேரும் வாழ்க்கையை இயக்கி வளர்ப்பன என்று கூறல் மிகையாகாது. ஊர் பேரால் உலகம் இயங்கல் வெள்ளிடைமலை. ஊர் பேரே உலகம்: வாழ்க்கை; எல்லாம் எல்லாம்.
இன்னோரன்ன சிறப்புக்கள் பல வாய்ந்த 'ஊரும் பேரும் இந்நூலுக்குத் தலைப்பாய் அமைந்தது. நூலின் பொருண்மையை விளக்கத் தலைப்பொன்றே சாலும். நூலுக்கேற்ற தலைப்பு: தலைப்புக்கேற்ற நூல்.
-திரு.வி.க