சதுரகராதி
வீரமாமுனிவர் எழுதிய சதுரகராதி - தமிழ் அகராதி வரலாற்றில் முதன்மையான நூல், சொற்களின் பொருள் மற்றும் பயன்பாடு அறிய உதவும் சிறந்த புத்தகம்.
| Category | Manual |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 512 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
‘சதுரகராதி’ - வீரமாமுனிவரால் முறையான அகர வரிசையில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி நூல். கி.பி. 1732இல் உருவாக்கப்பட்டு, பின்னிரு நூற்றாண்டுகளில் பல பதிப்புகள் பெற்ற நூல் இது.
‘பெஸ்கி அடிகளாரது சதுரகராதி’ என்னும் தலைப்பில் அறிஞர் சூ. இன்னாசி தம் முனைவர் பட்ட ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு, முதன் முதல் தமிழ் அகராதியலில் முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் சூ. இன்னாசி, அதுவரை வெளிவந்த பல பதிப்புகளையும் பர்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு உண்மைப்பதிப்பு எதுவென உறுதிசெய்துள்ளார். அப்பதிப்பை, 1979இல் வீரமாமுனிவர் ஆய்வுக்கழகம் வெளியிட்டது. அதன் புதிய பதிப்பு இது.