நிலவுக்கும் நெருப்பென்று பேர்
ராஜேஷ்குமார் எழுதிய நிலவுக்கும் நெருப்பென்று பேர் - காதல், மர்மம், மனநோய் பின்னணியில் விறுவிறுப்பான திரில்லர் நாவல். பொள்ளாச்சி டாப் ஸ்லிப் பற்றிய திகிலூட்டும் கதை!
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
Description
விடிந்தால் முகிலாவுக்கும் புவனேஷுக்கும் விநாயகர் கோவிலில் காதல் திருமணம். திருமணம் நடப்பதற்கு முன் ஒரு சின்ன விபரீதம் நிகழ்கிறது. அது என்ன...? இரவு 8 மணி அளவில் கோவை உக்கடம் பகுதிக்கு ஒரு குற்றவாளியைத் தேடிக்கொண்டு போன இன்ஸ்பெக்டர் உயிரோடு திரும்பவில்லை. அது ஏன்....? பைபோலார் மெண்டல் டிஸ்ஆர்டர் (Bipolar Mental Disorder) என்று சொல்லப்படும் மனநோயால் பாதிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் ஒவ்வொரு வார இறுதியில் பொள்ளாச்சியில் உள்ள டாப் ஸ்லிப் காட்டின் நடுவே இருக்கும் ஒரு ஏக்கர் பரப்புள்ள கெஸ்ட் ஹவுஸில் தங்குகிறார்கள். எதற்காக...? இந்த மூன்று கேள்விகளும் சந்திக்கும் புள்ளியில் பல திருப்பங்களோடு கூடிய வியப்புக்குரிய நாவல்தான் இந்த, ‘நிலவுக்கும் நெருப்பென்று பேர்’.