மாப்பசான் சிறுகதைகள் (சந்தியா பதிப்பகம்)
கைய் டே மௌபசண்ட் எழுதிய மாப்பசான் சிறுகதைகள் - பிரெஞ்சு இலக்கியத்தின் சிறந்த கதைகள், பெண்களின் வாழ்க்கை மற்றும் உளவியல் அனுபவங்களை ஆழமாகப் பேசுகின்றன.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
புதுமைப்பித்தனை போலவே 42 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மாப்பசான், கலாப்ரியாவைப் போல அழகான' கதைகள் எழுதியவர். 'அசிங்கங்களுக்கான
உலகம் போற்றும் பிரெஞ்சு எழுத்தாளரான மாப்பசானின் மிகச் சிறந்த கதைகள் எல்லாம் பெண்களின் கதைகள். பாலியல் தொழிலாளிகள், நடிகைகள், விளிம்பு நிலை மக்கள் குறித்த அவரது கதைகள் வலிமையானவை.
பொதுவாக அவரது கதைகளில் அவநம்பிக்கையும் நலிவும் நோய்மையும் படர்ந்திருக்கும். ஆனால் அவரது கதாபாத்திரங்கள் உளவியல் அனுபவங்களின் திரட்சியாக உருவெடுக்கின்றன.
துயரமும் இருண்மையும் கொண்ட கதைகளை எழுதிய மாப்பசான் அமைதியையும் தனிமையையும் விரும்பினார். நதியும் கடலும் அவர் நாடியவை. ஆனால் இறுதியில் மனநோயாளியாகி மரணமடைந்தார்.
இலக்கிய வாழ்வில் ஓர் எரிநட்சத்திரத்தைப் போல நுழைந்தேன்: ஓர் இடிமுழக்கத்தைப் போல வெளியேறுவேன்' என்று சொன்ன மாப்பசான் இன்றும் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறார்.