மலைபடுகடாம் ஆற்றுப்படை என்றொரு பயண இலக்கியம்
விஜயானந்தலட்சுமி எழுதிய மலைபடுகடாம் ஆற்றுப்படை என்றொரு பயண இலக்கியம் - பண்டைய தமிழ் இலக்கியத்தின் அழகையும், மலைபடுகடாம் பயணத்தின் சிறப்பையும் அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | History |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
மலைபடுகடாத்திற்கு மூலமும் உரையுமாகவுள்ள உ.வே.சா. பதிப்பு, வை.மு.கோ. பதிப்பு, பெருமழைப் புலவரின் கழகப்பதிப்பு ஆகியவை தவிர வேறு உரைவிளக்க நூல்கள் இல்லை என்றே கூறலாம். இங்ஙனம் பலரும் காணாக் கண்ணிட்டிருந்த பண்டைத் தமிழ்ப் பனுவலைத் தேர்ந்து அதன் அருமை கண்டு மலைக்காமல் 'மலை'யேறத் துணிந்த இந்நூலாசிரியர் விஜயானந்தலட்சுமி நம் போற்றுதலுக்குரியவரே.
தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந் திடுதல் ஆகிய இரு சிறகுகளால் இந்நூலினைச் சிம்புட் பறவை யெனச் சிறக்கச் செய்த நூலாசிரியர் திருமதி விஜயானந்தலட்சுமிக்கு நம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
-பேராசிரியர் ம.பெ.சீ.