கொஞ்சம் மருத்துவம் நிறைய மனிதம் (இரண்டாம் பாகம்)
Dr. S. அகிலாண்ட பாரதி எழுதிய கொஞ்சம் மருத்துவம் நிறைய மனிதம் (இரண்டாம் பாகம்) - மருத்துவ அனுபவங்கள், மனித நேயக் கதைகள் மற்றும் உடல்நல ஆலோசனைகள் நிறைந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge |
Description
சக மனிதர்களின் மீதான அக்கறையுடன் ஒவ்வொரு கட்டுரையையும் படைத்திருக்கிறார் அகிலாண்ட பாரதி. அதுவே தலைப்பு கூறும் மனிதம் என்ற சொல்லுக்கான முழு அர்த்தத்தையும் தந்து விடுகிறது. வாசகர்களுக்கு ஏற்படும் உடல் நலக்குறைவுகள் ஒவ்வொன்றுக்கும், தன்னுடைய அனுபவத்தையும் எழுத்தாற்றலையும் இணைத்து அறிவுரைகள் கூறியிருக்கிறார். அந்த வகையில் 'கன்சல் டேஷன்.. நோ ஃபீஸ்!" என்பதே இங்கு எதார்த்தமாகி யிருக்கிறது!
-ஜி. திலகவதி ஐபிஎஸ்
எழுத்தாளர்
கொஞ்சம் மருத்துவம் நிறைய மனிதம் நூலை மருத்துவம் சார்ந்த மனிதக் கதைகள் என்றே கூறலாம். பேன்கள் முதல் போர்கள் வரை, உடல் தானம் முதல் உறுப்பு தானம் வரை தன் அனுபவக் குவியல்களை எழுதி சுவாரஸ்யப்படுத்தி யுள்ளார். ஹிப்ஹாக்ரடிஸ், எட்வர்ட் ஜென்னர், அலெக்சாண்டர் ஃபிளமிங் போன்றவர்கள் வரிசையில் அகிலாண்ட பாரதியும் இடம்பெற வேண்டும். திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் நூல்கள் போல நவீன மருத்துவ இலக்கியத்திற்கு அவர் வழிவகுக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
- தமிழச்சி தங்கபாண்டியன் எழுத்தாளர்,
பாராளுமன்ற உறுப்பினர்