Skip to content

கிராமிய இசைக்கருவிகள்: ஒரு பண்பாட்டு வரலாறு

வெ. நீலகண்டன் எழுதிய கிராமிய இசைக்கருவிகள்: ஒரு பண்பாட்டு வரலாறு - அழிந்து வரும் பாரம்பரிய இசை கருவிகள், தமிழக இசை மரபு மற்றும் கோவில் இசை பற்றிய தகவல்கள் உள்ளன.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சுரமண்டலி என்ற ஒரு அற்புதமான இசைக்கருவி. யாழைப்போன்ற கருவி. வைத்தீஸ்வரன் கோவிலில் தேவாரம் இசைக்கும்போது அக்கருவியை இசைப்பார்கள். இன்று அக்கோவிலில் உள்ள ஒருவருக்கும் அக்கருவியைப் பற்றித் தெரியவில்லை. தமிழகம் முழுவதும் பல நாட்கள் தேடியலைந்தும் அக்கருவியைக் கண்டறிய முடியவில்லை. அண்மையில் காஞ்சி சங்கரமடம், வேடல் என்ற கிராமத்தில் அமைத்துள்ள அருங்காட்சியகத்தில் அக்கருவியைக் கண்டேன். ஆனால் அதை எப்படி இசைப்பது என்று கூட அங்கிருப்பவர்களுக்குத் தெரியவில்லை. வெறும் காட்சிப் பொருளாக இருக்கிறது. சில கோவில்களில் தோல் அறுந்தும், அடிப்பாகம் துருப்பிடித்தும் உன்னதமான பல இசைக்கருவிகள் வீணாகி வருகின்றன.

இந்நூலில் இடம்பெற்றுள்ள பல இசைக்கருவிகள் அழிவின் விளிம்பில் இருப்பவை. ஓரிரு இடங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருப்பவை. கோவில்களில் இருக்கும் கருவிகளை இசைக்க அடுத்த தலைமுறைக்கு ஆட்கள் இல்லை. பெரும்பாலான கோவில்களில் எலக்ட்ரானிக் இயந்திரங்களைப் பொருத்தியிருக்கிறார்கள். சுவிட்சைப் போட்டதும் அதிலிருந்து கிளம்பும் அவஸ்தையான சத்தம் கோவிலின் சூழலையே கெடுக்கிறது. உரிய அங்கீகாரம். போதிய வருமானம் இல்லாததால் இசைக்கலைஞர்கள் செங்கல்சூளைக்கும். கல்குவாரிக்கும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள்.