மூளையின் அடுக்குகள்
₹299₹284
சுமித்ரா சத்தியமூர்த்தி எழுதிய எறவாணமேறிய சிறகுகள் - நினைவுகள், ஆயா மற்றும் கடந்த கால உறவுகளைப் பற்றிய அழகான கதை. உணர்வுப்பூர்வமான அனுபவத்தை வழங்கும் நாவல்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
ஆயா
ஆயிரம் பௌர்ணமி
கண்டவளென ஆயாவை
கை காட்டி
அடையாளம் சொல்கிறார்
அடுப்படித் தாண்டி
அடுத்தொன்று கண்டிலேனென
அவரும் சொல்லவில்லை
எவரும் கேட்கவில்லை
நினைவுகள்
எவருடையவராகவோ
ஆகியிருக்கலாம்
எதார்த்தமாய் எதிர்ப்படும்
புகைப்படமொன்றின்
எப்போதோ கடந்தவராயிருக்கலாம்
உருவமதை உருப்பெருக்கி
உறைந்து கடக்கையில்
உள்ளிருக்கும் ஈர நினைவுகளில்
ஒரு முறை மூழ்கி
திரும்பியிருக்கலாம்!