Skip to content

என் இலக்கியத் தேடல்

முனைவர் தெ. ஞானசுந்தரம் எழுதிய என் இலக்கியத் தேடல் - இலக்கிய ஆய்வுகள், புதிய விளக்கங்கள், மற்றும் மறைந்த நூல்களின் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

என் இலக்கியத் தேடல்' என்னும் இந்நூலில் இலக்கண இலக்கியங்களைக் கற்றபோது எழுந்த ஐயங்கள் சிலவற்றிற்குப் பெற்ற தெளிவுகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பிய நூற்பா ஒன்று புதிய விளக்கம் பெற்றுள்ளது. குறுந்தொகை கூட்டவோ குறைக்கவோ வேண்டாதவாறு தொகுக்கப்பட்ட நூல் என்பது விளக்கப்பட்டுள்ளது. சிற்றெட்டகம் என்னும் மறைந்த நூலின் பாக்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன. இரு குறட்பாக்களின் பொருள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இளங்கோவடிகள் பெண்மையைப் போற்றும் பாங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

சைவத் திருமுறைகளில் ஏறியுள்ள சில பிழையான பாடங்களும், சில பாடல்களின் பொருள் அமைதியும் தெளிவாக்கப்பட்டுள்ளன. கம்பராமாயண நிகழ்ச்சிகளின் கால நிரல் பகுத்துரைக்கப்பட்டுள்ளது. இராவண வதம் கம்பர் காப்பியத்தின்படி நிறைநிலா நாளில் நிகழ்ந்தது என்பது அறுதியிடப்பட்டுள்ளது. பாரதியார் மிகவும் போற்றிய இலக்கிய ஆளுமை யார் என்பதும், சுரதாவின் தனித்தன்மைகள் எவை என்பதும், வா.செ.குழந்தைசாமியின் படிநிலை வளர்ச்சி யாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. தமிழ்க் கடலில் ஆழ்ந்து மூழ்கினால் உயர்ந்த முத்துகள் கையகப்படும் என்பதனைக் காட்டுவது இந்நூல்.