Skip to content

சிச்சிலி

ஒரு நூறு காதல் கவிதைகள்

லீனா மணிமேகலை எழுதிய சிச்சிலி - கவிதைகளின் ஆழமான அனுபவம், உணர்ச்சிகரமான வரிகள், மற்றும் ஆன்மாவைத் தேடும் பயணத்தை வழங்கும் ஒரு தனித்துவமான படைப்பு.

Category Poetry
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 104
Year 2016
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

நான்
உன் விரல்களுக்கிடையே வளரும் தாவரம்
உன் நடுங்கும் மூச்சுக்காற்றில் அடிக்கும் அலை
உன் அக்குள் முடியில் பரவும் பொடுகு
உன் மடித்த நாக்கில் உறையும் உப்பு
உன் மார்பில் நகரும் மழைமேகம்
உன் கால்களில் வெடிக்கும் பித்தம்
உன் குருதிக் கால்வாய்களில் குஞ்சு பொரிக்கும் மீன் என்னைத் தேடுபவர்கள்
உன் எலும்பின் சுதையை சுரண்டித்தான் எடுக்க வேண்டும்
என்னைப் புதைக்கவா எரிக்கவா எனக் கேட்பார்கள்
உன் ஆன்மாவின் முப்பத்தியெட்டாவது அறைச் சுவரின்
வலப்பக்க ஓரத்தில்
எளிதில் பெயர்த்து எடுத்துவிட முடியாத
ஓவியமாக என்னை மாட்டிவிடு

-லீனா மணிமேகலை