செவன் சாமுராய் (திரைக்கதை)
அகிரா குரோசவா எழுதிய செவன் சாமுராய் (திரைக்கதை) - சிறந்த திரைக்கதை எழுதவும், திரைப்படக் கலையை கற்கவும் உதவும் ஒரு வழிகாட்டி. செவன் சாமுராய் திரைப்படம் பற்றிய முழுமையான புரிதல் இங்கே.
| Category | Screenplay |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
திரை எழுத்தாளர்கள் கற்கவேண்டிய பாடப் புத்தகம்
உலகின் தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்று 'செவன் சாமுராய்'. திரைப்பட மேதை அகிரா குரோசவா இயக்கிய இந்த ஜப்பானிய மொழித் திரைப்படம் 1954இல் வெளிவந்தது. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் உலகத் திரைப்பட ரசிகர்களால் திரும்பத் திரும்பப் பார்க்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
உலகம் முழுவதும் திரைப்படக் கல்லூரிகளில் மாணவர்கள் பயிலும் பாடமாகவும் 'செவன் சாமுராய் இருக்கிறது. ஆகவே கலைப்படம், வணிக சினிமா என்ற பேதமின்றி நல்ல திரைக்கதை எழுதப் பயில்பவர்கள் அனைவரும் அவசியம் பயில வேண்டிய படம் 'செவன் சாமுராய்'.
யுகனின் செவன் சாமுராய்' திரைக்கதை மொழிபெயர்ப்பு மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் திரைப்படத்தின் காட்சிகளை கண் முன் கொண்டு வருபவையாகவும் இருக்கிறது.
ஒவ்வொரு காட்சியையும் அழகாக விவரித்து வசனங்களை மிக எளிமையாக மொழிபெயர்த்து வழங்கி இருக்கிறார்.
புத்தகம் படித்துவிட்டுத் திரைப்படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி, படம் பார்த்துவிட்டு இப்புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு இது ஒரு பயிற்சிக் கையேடு.
- பிருந்தா சாரதி, திரை எழுத்தாளர்-இயக்குநர்