Skip to content

சமூகச் சித்திரம்

க. நா. சு. எழுதிய சமூகச் சித்திரம் - சமூகத்தின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் நாவல். பணம், லட்சியம் குறித்த ஆழமான சிந்தனைகள் நிறைந்த புத்தகம்.

Category Essay
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Society and Economy

Description

லோகநாதன் சொல்லுவான்: "நாய் விற்ற காசு குலைக்கவே குலைக்காது தம்பி. காசிருந்துவிட்டால் போதும். என்னமோ உலகத்தில் லட்சியம், லட்சியம் என்கிறார்கள், கொள்கை என்கிறார்கள், சத்யம் என்கிறார்கள். குணம் என்கிறார்கள், தெய்வம் என்கிறார்கள். அதெல்லாம் பொய் தம்பி, நம்பாதே; வெறும் புரட்டு. பணம் எல்லாவற்றிற்குமே ஆதாரமான லட்சியம். லட்சியங்கள் வேறு எத்தனை எத்தனையோ இருக்கலாம். ஆனால் பணம்தான் அவற்றிற்கெல்லாம் ஆதாரம். அடிப்படை பணமில்லாத வெறும் வரட்டு லட்சியவாதியை யாரும் சீண்டவே மாட்டார்கள். தூர ஒதுங்கிப் போய்விடுவார்கள்.

- நூலிலிருந்து....