கண் தெரியாத இசைஞன் (நற்றிணை)
விளாதீமிர் கொரலேன்கோ எழுதிய கண் தெரியாத இசைஞன் (நற்றிணை) - மகிழ்ச்சி, அன்பு, மனித உறவுகளைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டும் சிறந்த நாவல். நற்றிணை இலக்கியம் விரும்புவோருக்கு ஏற்றது.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
மகிழ்ச்சியைப் பற்றிக் கூறும் கதை என்று இந்த நாவல் சொல்லப் படுகிறது. "மனித மகிழ்ச்சி என்பது என்ன? அதை அடையக் கூடிய மிக மிகச் சிறந்த வழிகள் எவை? என்பவை இந்த நாவலில் ஆராயப்படுகின்றன.
இக்கதையில் தோன்றும் ஒவ்வொரு பாத்திரமும் பார்வையற்ற பியோத்தர், அவனுடைய தாயார், அவனது காதலி, அவனுடைய குருநாதரான மக்சீம் மாமா, அந்தப் பார்வையற்ற பாடகன் சந்திக்கின்ற எல்லோரும் இந்தக் கேள்விக்குத் தன்னுடைய சொந்த முறையில் பதிலளிக்கிறார்கள். வாசகரும் அதைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியாது. இதில் தான் அறிவாழமிக்க, அன்புணர்ச்சி பெருகியோடும் இப்புத்தகம் எழுப்புகின்ற சிந்தனைகளில் உலகம் முழுவதிலும் வெவ்வேறு வயதுகளைச் சேர்ந்த எல்லோரும் இப்புத்தகத்தை விரும்பிப் படிப்பது ஏன் என்ற ரகசியம் அடங்கியிருக்கிறது.