Skip to content

கடலும் கிழவனும் (கேசவமணி)

எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய கடலும் கிழவனும் - மனிதனின் விடாமுயற்சியையும், நம்பிக்கையையும் சொல்லும் சிறந்த நாவல். நோபல் பரிசு பெற்ற கதை இது.

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

எர்னெஸ்ட் ஹெமிங்வே 1950, 1951 க்கும் இடைப்பட்ட ஒரு வருடத்தில் கடலும் கிழவனும் நாவலை எழுதினார். இது அவருடைய கடைசிப் படைப்பாகும். அவர் இந்நாவலை அவருடைய கொந்தளிப்பான காலகட்டத்தில் கியூபாவில் இருந்தபோது எழுதினார்.

ஹெமிங்வேயின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கார்லோஸ் பேக்கர் இந்நாவலைப் பற்றிச் சொல்லும்போது, "ஹெமிங்வேயின் இறுதிப் படைப்பான கடலும் கிழவனும், எளிய சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் முத்தைப் போல. எளிமையான கதைக்குள் ஆழமான அர்த்தத்தைப் பொதிந்து வைத்திருக்கும் ஓர் அழகான, அற்புதமான நாவல்" என்று குறிப்பிட்டார்.
இச்சிறிய நாவல் நோபல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

- கேசவமணி