இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் (நற்றிணை பதிப்பகம்)
தேவிபிரசாத் சட்டபோபாத்யாய எழுதிய இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் - இந்தியத் தத்துவம், தத்துவ இயல் மற்றும் பாரம்பரியத்தை அறிவியல் அடிப்படையில் ஆராய்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
இந்த நூல் மதச் சார்பின்மை, பகுத்தறிவு, அறிவியல் நோக்கு என்கிற அடிப்படையில் இந்தியத் தத்துவ இயலின் பாரம்பரியத்தை ஆராய்கின்ற நூலாகும்.
நாம் கடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்தியத் தத்துவ பரம்பரையைப் பற்றிய ஒரு மதிப்பீடு என்பது ஒரு ஆவனுள்ள புதை பொருள் ஆராய்ச்சிக்கும் மேலானதே.
இந்தியத் தத்துவப் பாரம்பரியத்தை புரிந்து கொள்வதற்கு பொதுமைப் படுத்துவதிலிருந்து விலகிச் செல்லுதல் வேண்டும். ஒரு தத்துவக் கண்ணோட்டத்தில் எவை நிலைத்திருப்பவை எவை மறைந்தவை என்பதனை வேறுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நமது தத்துவப் பாரம்பரியத்தின் பரந்த தன்மை பல்முனை கூறுகளும் கொண்டது. நமது தத்துவப் பாரம்பரியத்தில் தந்துவத்திற்கு அப்பாற்பட்ட தலையீடுகளும் ஏற்பட்டுள்ளன. இவற்றைக் கணித்து ஆய்ந்திடுவது அவ்வளவு சுலபமானது அல்ல.
இந்த நூல் விவாதத்திற்கு ஒரு நல்ல விஷயத்தைத் தந்திருப்பதாக நான் நம்புகிறேன். சுவையான விவாதம் உருவெடுக்குமானால் நான் பட்ட கஷ்டத்திற்கு அப்போதுதான் சரியான வெகுமதி கிடைத்ததாகும்.
-தேவிபிரசாத் சட்டோபாத்யாயா