Skip to content

ஏழு பேர்

க. நா. சு. எழுதிய ஏழு பேர் - ஒரு புதிய குடும்பத்தின் மர்மங்கள் நிறைந்த கதை. உறவுகள், சமூக சிக்கல்கள் மற்றும் மனித மனதைப் பற்றிய நுண்ணிய பார்வை. ஏழு பேர் நாவல்!

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Life and Society

Description

சிதம்பரம் பிள்ளையார் கோயில் தெருவுக்குக் குடி வந்திருந்த அந்தப் புதுக் குடும்பத்தைப் பற்றி விசாரித்து, ஓரளவு தெரிந்துகொள்ள ராஜாவுக்கோ, ராஜிக்கோ அதிக நேரம் பிடிக்கவில்லை. பேசுவதில் பிரியமுள்ள மனிதர்கள் - அதுவும் பிறரைப் பற்றிப் பேசுவதில் பிரியமுள்ள மனிதர்களுக்குக் குறைவா என்ன?

ராஜாவுக்குப் பக்கத்து வீட்டுக்காரர். சின்ன மளிகைக் கடை முதலாளி வேலாயுத முதலியார் சொன்னார். "நாலாவது வீட்டுக்கு நேத்தி சாயங்காலம் யாரோ குடி வந்து விட்டார்கள் போலிருக்கே!" என்று.

"கேள்விப்பட்டேன். பட்டணத்திலிருந்து வந்தவர்கள் என்று தெரிகிறது. மற்றபடி..."

"மற்றபடி என்ன? சாப்பாட்டுக்கு இல்லாதவர்கள். ஆனால், பெண்கள் உடுத்துகிறதையும் அலங்காரம் செய்துகொள்றதையும் பார்த்தால், குபேரன் வீட்டு மக்கள் மாதிரித்தான் தோணுகிறது. பெரியவர்களும் சின்னவர்களுமாக ஏழெட்டுப் பேருக்கு மேல் இருக்கிறார்கள். மூத்த பையனைப் பார்த்தால்..." என்று இழுத்துப் பாதியில் நிறுத்தினார் முதலியார்.

- நூலிலிருந்து....