தத்தக்கா புத்தக்கா
ஜே. எஸ். ராகவன் எழுதிய தத்தக்கா புத்தக்கா - நகைச்சுவையான கதைகள், வாழ்க்கைச் சிக்கல்கள் மற்றும் மனித உறவுகளின் இனிமையான சித்தரிப்புடன் கூடிய புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
பிரசவ வலியோடு ஆட்டோவில் செல்லும் ஒரு பெண், சுவாரசியமாக ஊர்க்கதை பேசிக்கொண்டுபோக முடியுமா?
தன் பிள்ளையையும் மருமகளையும் முதியோர் இல்லத்தில் சென்று பார்க்கப் போகும் ஒரு கிழஜோடியை நம்மால் கற்பனை செய்ய முடியுமா?
காலில் கள் குத்தினால் கூட, அக்கம் பக்கம் யாராவது நோட்டம் விடுகிறார்களா என்று பார்த்துவிட்டு, நிதானமாக, சத்தமில்லாமல் கத்தும் ஒரு குடும்பத்தை நினைத்துப் பார்க்க முடிகிறதா?
தற்கொலை எண்ணத்துடன் கடலை நோக்கிச் செல்லும் ஒருவனைப் பார்த்து கண்ணில் நீர் வர சிரிக்க முடியுமா?
இந்தப் புத்தகம் முழுவதும் நினைத்துப் பார்க்கவே முடியாத சூழ்நிலைகளை, நினைத்துப் பார்த்து, நினைத்து நினைத்துச் சிரிக்கும்படி காமெடி கும்ப மேளா நடத்திஇருக்கிறார் ஜே.எஸ். ராகவன்