Skip to content

ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட்

இரா. முருகன் எழுதிய ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - திட்டமிடல், தலைமைத்துவம், ஐ.டி. துறையில் வளர்ச்சி ஆகியவற்றை எளிய முறையில் கற்று, வாழ்க்கையை மாற்றியமைக்க உதவும் புத்தகம்.

Category Manual
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 144
Year 2010
Format Paperback
Tags Society and Economy

Description

பெரும்பாலான கல்லூரி மாணவர்களின் கனவுத்துறை, கம்ப்யூட்டர் அல்லது எலக்ட்ரானிக்ஸ். படித்து முடித்தாகிவிட்ட பிறகு, அடுத்த கனவு ஒரு நல்ல ஐ.டி. நிறுவனத்தில் பணியில் அமர்வது. அடுத்தது வெளிநாட்டுப் பயணம். பிறகு வேலை உயர்வு. அடுத்த?

பணிவாழ்வின் மிக முக்கியமான ஒரு கட்டத்துக்கு வந்து சேர்கிறார்கள். இன்னும் ஒரு கனவுதான் எஞ்சியிருக்கிறது. ஒரே ஒரு படி மேலே, உயர்ந்து விட்டால், உங்கள் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடும்.

யாரோ வகுத்துக்கொடுத்த திட்டங்களை இனி நீங்கள் செயலாற்ற வேண்டியதில்லை. இனி நீங்கள் தான் திட்டமிடவேண்டும். நீங்கள்தான் தலைமை தாங்கவேண்டும். நீங்கள்தான் உங்கள் டீமை வழிநடத்த வேண்டும். இரா. முருகனின் இந்தப் புதகம் திட்ட நிர்வாகத்தின் அத்தனை அம்சங்களையும் மிக எளிமையாக, மிக சுவாரஸ்யமாக, அனுபவப்பூர்வமாகவும் கற்றுக்கொடுக்கிறது.