பிரிவோம் சந்திப்போம் (இரு பாகங்களும்)
சுஜாதா எழுதிய பிரிவோம் சந்திப்போம் - காதல், நட்பு, மற்றும் வாழ்க்கைப் பயணத்தை அழகாகச் சொல்லும் கதை. திருநெல்வேலி முதல் அமெரிக்கா வரை விரியும் உணர்வுப்பூர்வமான நாவல் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 368 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
Description
‘பிரிவோம்... சந்திப்போம்’ ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி முடித்தார். வாழ்க்கையில் எதையுமே அதிதீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி, அலட்சியமான நடத்தைகொண்ட அமெரிக்க இந்திய இளைஞன் ராதா கிஷன், மனத்தில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா, தீர்க்கமான அமெரிக்க தமிழ்ப்பெண் ரத்னா என்கிற நான்கு கதாபாத்திரங்களுடன் இயங்கும் இந்தக் காதல் கதை திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது. ‘ஆனந்த தாண்டவம்’ என்று சினிமாவாகவும் எடுக்கப்பட்ட கதை. இரு பாகங்களும் சேர்ந்து ஒரு புத்தகமாக முதல் முறையாக வெளியாகிறது.