ஊழல் – உளவு – அரசியல்
அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்
சவுக்கு சங்கர் எழுதிய ஊழல் - உளவு - அரசியல் - தமிழக அரசியல், ஊழல், அதிகார வர்க்கத்தின் சதி பற்றிய உண்மையான கதை. விறுவிறுப்பான அரசியல் விமர்சனம்!
| Category | Autobiography |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 224 |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
நான் உண்டு, என் வேலை உண்டு என்று அநேகம் பேர் போல் என்னால் இருக்கமுடியவில்லை. நான் பணிசெய்யும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலேயே பல்வேறு ஊழல்களும் முறைகேடுகளும் நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. சமூக நலன் சார்ந்து சிந்திக்கவேண்டிய, செயல்படவேண்டிய கட்டாயத்துக்கு நான் தள்ளப்பட்டேன் என்கிறார் சவுக்கு சங்கர்.
அதற்குப் பிறகு நடந்தது அனைவருக்கும் தெரியும். சங்கர் கட்டம் கட்டப்பட்டார். அவர்மீது பொய்க் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன. அதிகார வர்க்கம் அவரைத் தீவிரமாக வேட்டையாடத் தொடங்கியது. வேலை பறிக்கப்பட்டது. காவல் துறையினரால் தாக்கப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டார். உடல், உள்ளம் இரண்டையும் வதைக்கும் நடவடிக்கைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டன.
ஒரு சாமானியன் அதிகாரவர்க்கத்துக்கு எதிராக
மேற்கொண்ட அசாதாரணமான போராட்டமே 'ஊழல்-உளவு-அரசியல்'. சவுக்கு சங்கரின் வாழ்க்கை, போராட்டம் இரண்டும் (அல்லது ஒன்றுதானா?) விரிவாகவும் நேரடியாகவும் இதில் பதிவாகியிருக்கின்றன. தமிழக அரசியல் வரலாற்றின் சர்ச்சைக்குரிய பல பக்கங்களும் இதில் இருக்கின்றன. விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ள ஒரு முக்கியமான புத்தகம்.