Skip to content

மாமலர் (செம்பதிப்பு)

வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்

ஜெயமோகன் எழுதிய மாமலர் (செம்பதிப்பு) - வனவாசத்தில் பீமனின் காதல், தத்துவம், மற்றும் ஆளுமைப் பயணத்தை விவரிக்கும் ஒரு சிறந்த நாவல்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 968
Year 2017
Format Hardcover
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

மாமலர் -வெண்முரசு நாவல் வரிசையில் பதிமூன்றாவது நாவல்.

பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவன் காதலின்பொருட்டு நிராகரிக்கும் ஓர் இடம் இந்நாவலில் வருகிறது. எதையும் தத்துவார்த்தமாக ஆக்காமல் எங்கும் பின் திரும்பி நோக்காமல் சென்றுகொண்டே இருப்பது அவன் ஆளுமை.

மாமலர் பீமனுக்குச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவன் காதலன். காதலனே பெண்ணை அணுகி அறியமுடியும். அன்னையரையும் அவனால்தான் அறியமுடியும். இது அவனுடைய மூதன்னையரின் கதைகளும்கூட.