Skip to content

குற்றவாளிக்கூண்டில் மநு

மநு தர்மசாஸ்திரம் குறித்த ஓர் ஆய்வு

எஸ். செண்பகப்பெருமாள் எழுதிய குற்றவாளிக்கூண்டில் மநு - சாதி, தீண்டாமை, மநு தர்மசாஸ்திரம் குறித்த ஆழமான விமர்சனப் பார்வை! இந்திய சமூகத்தின் உண்மை நிலையை அறிய ஒரு புத்தகம்.

Category Essay
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 144
Year 2018
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்திய ஆன்மிகம் ஒருபக்கம் புகழப்படும் அதே நேரம், இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதிப் பிரிவினைகள், தீண்டாமை ஆகியவை குறித்துக் கடுமையான விமர்சனங்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும்கூட இருப்பதைக் காண முடியும்.சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலை என்று எதனை எடுத்துக்கொண்டாலும் 'மநு' என்ற பெயர் உடனே விவாதத்துக்கு வந்துவிடும். மநு தர்மசாஸ்திரம் என்பது இந்தியாவில் ஒரு காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த சட்டவிதிகளின் தொகுப்பாகும். இந்தியாவின் இன்றைய சமூகப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் மநு என்பது இன்றைய அரசியல்வாதிகள் பலரின் கருத்து. இந்தியச்சமூகம், 'மநுவாதி' சமூகம் என்று 'இகழப்படுகிறது'. உண்மை என்ன?