Skip to content

கேங்டாக்கில் வந்த கஷ்டம் (கிழக்கு பதிப்பகம்)

சத்யஜித் ரே எழுதிய கேங்டாக்கில் வந்த கஷ்டம் - ஃபெலுடா துப்பறியும் கதை, சத்யஜித் ரேயின் சிறந்த படைப்பு, கிழக்கு பதிப்பகத்தின் அறிமுகம்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 128
Year 2008
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. கலைப்பட இயக்குநராக நாமறிந்த ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை.

1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய, ஃபெலுடா வீரசாகசக் கதைகள் வங்காளத்திலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இந்தக் கதைகளின் நாயகன் ஃபெலுடா, வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என அழைக்கப்படுபவர். முதல் முறையாக, சத்யஜித் ரேயின் படைப்புகள் காலவரிசைப்படுத்தப்பட்டு, தமிழில் வெளிவருகின்றன.

ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் ‘கேங்டாக்கில் வந்த கஷ்டம்’ ஐந்தாவது புத்தகம். கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக, இமயமலையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் கேங்டாக் செல்கிறார்கள் தபேஷும் ஃபெலுடாவும். விமானத்தில் அறிமுகமாகிறார் திரு. போஸ். மூவரும் கேங்டாக்கில் கால்வைக்கும் போது, போஸின் நண்பர் ஷெல்வான்கர் ஒரு விபத்தில் மரணமடைந்த செய்தி இவர்களுக்காகக் காத்திருக்கிறது. அது உண்மையில் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா? ஃபெலுடா துப்பறியத் தொடங்குகிறார்.