இதன் பெயரும் கொலை
சுஜாதா எழுதிய இதன் பெயரும் கொலை - கணேஷ், வசந்த் துப்பறியும் சாகசங்கள் நிறைந்த நாவல். தொடர் கொலைகளைத் துரத்தும் விறுவிறுப்பான கதை!
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 216 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
Description
கணேஷ்- வசந்த் தோன்றும் இருபத்தைந்தாவது நாவல் இது. தொலைக்காட்சியிலும், சுஹாசினி இயக்கும், தோன்றும், தொடரில் வருகிறார்கள். கணேஷ் - வசந்தின் தோற்றத்தைப் பற்றி பலருக்குப் பலவிதமான மன வடிவங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சியில் காட்டும்போது ஒவ்வொரு பிம்பத்தையும் நிறைவேற்றுவது கஷ்டம். இதனால் அவர்கள் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட கதையின் சுவராசியித்தில் கவனம் செலுத்துமாறு சுஹாசினியிடமும், பர்யாவிடமும் சொன்னேன்.
- சுஜாதா
குமுதம் இதழில் தொடராக வந்த இந்த நாவல் கணேஷ் - வஸந்த் இணைந்து மிரட்டிய இருபத்தைந்தாவது நாவல். ஒரு அபாக்கிய தற்கொலை கேஸில் தலைநீட்டி அதைத் தொடர்ந்து தொடர் கொலைகளை துரத்திச் செல்லும் கணேஷ், வஸந்த் சாகசங்கள் தொலைகாட்சித் தொடராகவும் ஒளிபரப்பானது.