ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன
இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன - வாழ்க்கையின் யதார்த்தம், காதல் மற்றும் கிண்டலுடன் ஒரு புதிய வாசிப்பு அனுபவம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2006 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
Description
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி.
இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று கேட்டால் இல்லை. ஆனால் இதில் காதல் இருக்கிறது. ஒப்பனை இல்லாமல், பாசாங்கு செய்யாமல், எந்த போர்வையும் அணியாமல் மிக இயல்பாக ஒரு பட்டாம்பூச்சியைப் போல சுற்றிச் சுற்றி வருகிறது. சிறைபடுத்த முயலும் கைகளைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கிறது.
முற்றிலும் புதியதொரு அனுபவத்தை முற்றிலும் புதியதொரு நடையில் கிண்டலும் கேலியும் இழையோட அளித்திருக்கிறார் இ.பா. 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' அவரது முக்கிய படைப்புகளில் ஒன்றாக இன்று வரையில் கொண்டாடப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.