வெயிலோடு போய்
முதல் சிறுகதை நூல் வரிசை
ச.தமிழ்ச்செல்வன் எழுதிய வெயிலோடு போய் - கிராமிய வாழ்வின் போராட்டத்தையும், மனிதர்களின் மன உறுதியையும் உணர்த்தும் சிறந்த நாவல். சமூகச் சிந்தனைகள் நிறைந்த படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
ச.தமிழ்ச்செல்வனின் மனிதர்கள் வாழ்வின் கடைக்கோடியிலிருந்து எழுபவர்கள். வாழ்வின் நெடுஞ்சாலைகளில் அவர்கள் பயணிக்க முடிவதில்லை. சிண்டுசிடுக்கான நகர வாழ்வின் அனுபவங்களும் இல்லை.
கிராமியத்தின் வெள்ளந்தி மனங்களைச் சமூக வாழ்வு தன் ஆக்ரோஷத்தால் வெல்லப் பார்க்கிறது; எனினும் அவர்கள் பின்வாங்குவதில்லை; தொடர்ந்து போராடி வெல்கிறார்கள். இந்த வெற்றியை அவர்களுக்கு தரும் வல்லமை எது? அந்த ஊற்றுக்கண் எங்கிருந்து பொங்குகிறது?
மிக மிக அபூர்வமாக வாய்க்கக் கிடைக்கிற தருணங்களில் ஒற்றை இழையிலிருந்து முகிழ்க்கும் இந்த வாசனையின் பெயர் என்னவோ, அதுதான் இப்படைப்புகளின் ஆதாரம்.
- களந்தை பீர்முகம்மது