வேளிமலைப் பாணன்
ஜி. எஸ். தயாளன் எழுதிய வேளிமலைப் பாணன் - வாழ்வின் துயரங்களையும் நம்பிக்கையையும் கவித்துவமாகப் பேசும் கவிதைகள், உங்கள் மனதை லேசாக்கும் சிறந்த படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
Description
சூழ்நிலைகளின் பரபரப்புகளில் ஆவேசங்கொள்ளாமல் கவிஞனாயிருத்தல் தனித்த சுபாவம். கவிஞனாயிருப்பதற்கும் கவிதையெழுதுகிறவனாயிருப்பதற்கும் இடைப்பட்ட வேறுபாடு இது. ஜி.எஸ்.தயாளன் 'கவிஞனாயிருத்தல்' வாய்க்கப் பெற்றவர். அதுவே அவரும், அவரைப் போலவே அவரது கவிதைகளும் பெற்றிருக்கும் அழகு. ஏராளமானவர்கள் எழுதும் கவிதைகளுக்கிடையில், எளிமையான இவரது கவிதைகள்; சலனமும் நிச்சலனமும் கொண்ட கவிஞனால் உருப்பெற்றவை. சலனமுறும் வாழ்வை நிச்சலனத்தால் வரைந்து பார்ப்பவை.
இயலாமை, துக்கம், போராட்டம் இவற்றிற்கிடையில் வாழ்தலுக்கான நம்பிக்கையை வலுப்பவை.
வாழ்தலை லெகுப்படுத்திக்கொள்ளப் பிரயத்தனப்படுபவை.
லெகுப்படுத்திக்கொள்ள இயலாமற்போகிற பட்சத்திலும்கூட. . .
வந்து செல்பவர்களுக்கு மத்தியில் தொடர்ந்து செயல்படும் ஜி.எஸ்.தயாளனை நிலைபேறு கொள்ளச்செய்யும் குணம் இதுதான். இந்த வேளிமலைப் பாணனுக்கு வாழ்தலே லட்சியம். கவிதை அதன் சாரம்.
- லக்ஷ்மி மணிவண்ணன்