Skip to content

தேன் இனிப்பது எல்லோர்க்கும் தெரியாது

உமாதேவி எழுதிய தேன் இனிப்பது எல்லோர்க்கும் தெரியாது - பவுத்தக் கவிதைகள், வாழ்க்கை மற்றும் மரணத்தின் உண்மையை உணர்த்தும் ஆழமான படைப்பு. பண்பாட்டு இயக்கங்களை ஊக்குவிக்கும் புத்தரின் தத்துவங்கள் இதில் உள்ளன.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 72
Year 2016
Format Paperback
Tags Faith and Spirituality

Description

பவுத்த அடையாளங்களை மீளுருவாக்கம் செய்கின்ற உமாதேவியின் கவிதைகள் பண்பாட்டு இயக்கங்களை தீவிர நிலைக்கு அழைத்துச் செல்கின்றன.
வாழ்வையும் மரணத்தையும் பற்றிய இக்கவிதைகளின் அணுகுமுறை வாழ்க்கை முரண்பாடுகளாலானது என்ற புத்தரின் உண்மைகளைப்போல் வெளிப்படையானது.
பதம் குலையாத பவுத்த பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட உமாதேவி, பூர்வீக பவுத்தப் பெண்ணியத்தில் தேறிக்கொண்டிருக்கும் தேரி. மறக்கடிக்கப்பட்ட மணிமேகலையின் அட்சய பாத்திரத்திலிருந்து சாதி சமூக நோய்க்கு மருந்தாகின்றன இவரது கவிதைகள்.

-பாரதிபிரபு