Skip to content

பூக்குழி

பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி - வாழ்க்கை, முரண்கள் மற்றும் மனித மனதின் சிக்கல்களைப் பற்றி ஆழமான ஒரு நாவல். சமூக வேறுபாடுகளைக் கடந்து அன்பை உணரத் தூண்டும் புத்தகம்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 160
Year 2014
Format Paperback
Tags Philosophy and Thought

Description

‘பூக்குழி’யின் மூன்றாம் பதிப்பு இது. வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும் என்னை வியப்படையச் செய்கின்றன; சலிப்புறவும் வைக்கின்றன. ஏன் நாம் வேறுபாடுகளை முன்னிலைப்படுத்துகிறோம்? அவற்றை இயல்பாகக் கடந்து அன்போடும் மகிழ்ச்சியோடும் வாழ இயலாதா? நம் சிந்தனையின் குறுகலுக்குக் காரணம் என்ன? இந்தப் பிரபஞ்சம் தன் விரிவை ஏன் நமக்குள் கடத்தவில்லை?

- பெருமாள்முருகன்