Skip to content

பெண் டிரைவர்

கார் ஓட்டுனர்களாக இருக்கும் பெண்களின் கதைகள்

ஜெயவதி ஸ்ரீவத்சவா எழுதிய பெண் டிரைவர் - ஏழைப் பெண்களின் வாழ்வாதாரப் போராட்டத்தையும், டிரைவர் வேலையில் அவர்கள் கண்ட வெற்றியையும் இந்நூல் விவரிக்கிறது.

Category Autobiography
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 168
Year 2018
Format Paperback
Tags Life and Society

Description

‘பெண் டிரைவர்’ என்ற இந்தப் புத்தகம் மிகவும் ஏழை, விளிம்புநிலையில் வாழும் பெண்கள் தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள அல்லது ஒரு வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள டிரைவர் என்கிற தொழிலை முன்னெடுத்து எப்படி வெற்றி கண்டார்கள் என்பதைச் சொல்லும். இதில் ஆவணப்படுத்தப் பட்டுள்ள 12 பெண்களின் கதைகள் அவர்கள் வெற்றிபெற எத்தகைய இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, எப்படி சமரசங்களை மேற்கொள்ளவேண்டிவந்தது, எப்படி உறவுநிலைகளை மீறி வெற்றியடைய வேண்டியிருந்தது என்பதை விளக்குகின்றன.