Skip to content

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - வாழ்க்கையின் அர்த்தம், மனித உறவுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த சிறந்த நாவல்.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 320
Year 2007
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர்,பெற்றோர், என்ன சாதி,என்ன இனம் என்று எதுவும் தெரியாத,அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது. எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளாகிவிட்ட பின்னரும் இன்றைய சூழலுக்கு பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.