Skip to content

நீராம்பல்

கங்கா பாஸ்கரன் எழுதிய நீராம்பல் - புலம்பெயர்ந்த வாழ்வின் வலிகளையும், ஊரின் நினைவுகளையும் அழகான கவிதைகளாக வழங்குகிறது. புதிய படிமங்கள் நிறைந்த கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

முகமும் பெயரும் அடையாளமும் அறியாமல் கங்காவின் கவிதைகளை முதலில் வாசித்தேன். சிங்கப்பூர் தங்க முனை விருதிற்குரிய போட்டியில் வாசிக்கக் கிட்டியவை கங்காவின் கவிதைகள்.

சொற்செட்டும் புதிய படிமங்களும் புலம்பெயர்ந்தாலும் புலத்திலிருந்து இடையறாமல் தவிக்கச் செய்கின்ற நுண்ணுணர்வும் மாறிமாறி நெய்கிற கவிதைகள் அவருடையவை. ஊரும் உறவும் நகர வாழ்வில் எத்தகைய மாற்றங்களை அற்புதமாகவும் அழகாகவும் ஆனால் வலி மிகுந்ததாகவும் மாற்றுகின்றன என்பதை ஆழமான, அழகான கவிக்குரலுடன் கங்கா எம்மிடம் கொண்டுவருகிறார். கவிதைகளில் ஒலியும் எதிரொலியும் ஒன்றாகப் பின்னி வருகின்ற புதுமை அவர் கவிதைகளில் நிகழ்கிறது.