Skip to content

கலை காணும் வழிகள்

ஜான் பெர்ஜர் எழுதிய கலை காணும் வழிகள் - ஓவியங்களைப் புதிய கோணத்தில் பார்க்கவும், கலையின் அழகை உணரவும் உதவும் ஒரு சிறந்த புத்தகம். கலை விமர்சனம், அழகியல் பற்றிய நுண்ணறிவு.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 192
Year 2024
Format Paperback
Tags Philosophy and Thought

Description

-கலையுலகில் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்திய நூல் ஜான் பெர்ஜரின் 'கலை காணும் வழிகள்'. பிபிசி தொலைக்காட்சித் தொடரொன்றை அடியொற்றி எழுதப்பட்ட இந்த நூல் 1972இல் வெளியானது.

ஜான் பெர்ஜர் பண்டைய ஓவியங்களின் மீதிருக்கும் மாயப்போர்வையை விலக்கி அவற்றைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறார். படைப்புகளை அவற்றின் புதிர்ச் சிறையிலிருந்து விடுவிக்கிறார். பார்வையாளர்களுக்கும் படைப்புகளுக்குமான இடைவெளியைக் கணிசமாகக் குறைக்கிறார். ஓவியங்களைப் பார்க்கும் முறை மாறுகிறது. ஓவியங்கள் நமக்கு நெருக்கமாகின்றன. நுட்பமான விவரணைகளும் ஆழமான அழகியல் பார்வைகளும் கொண்ட இந்த நூலைத் தமிழ் வாசகர்களுக்கு அணுக்கமான முறையில் மிக எளிமையாகத் தமிழாக்கியிருக்கிறார் பி.ஏ. கிருஷ்ணன்.