Skip to content

இரண்டு கிராம் யானை

ஜே. மஞ்சுளாதேவி எழுதிய இரண்டு கிராம் யானை - யானைகளின் வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கவிதை தொகுப்பு.

Category Poetry
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Pages 144
Year 2024
Format Paperback
Tags Life and Society → Environment and Ecology

Description

‘ஆதித் தாயை
இன்றும் காட்டும் யானைக் கூட்டம்
அப்பத்தாக்களின் பின்னால்
வரிசையிடும்'
யானைகள் இயற்கையின் அதிசயங்கள் மட்டுமல்ல. நேசத்துக்குரிய பண்புகள் நிறைந்திருக்கும் களஞ்சியங்கள்.
மனிதன் மெச்சத் தகுந்த அறிவுடையவனாயினும் அழிவின் விதைகளை இன்னமும் சுமந்து நிற்கிறான். யானை என்ற வன நாயகன் மூலமாக மனிதனுக்குச் சில உண்மைகளைக் கவிஞர் கனிவோடும் கண்டிப்போடும் சொல்ல விழைகிறார்.
அந்த விழைவின் விளைச்சலே ‘இரண்டு கிராம் யானை’.
புத்தகத்தின் பெயர்தான் ‘இரண்டு கிராம் யானை'யே தவிர கருத்தாலும், வளத்தாலும் கற்பனையாலும் ஆயிரம் பொன் யானை இது என வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள்.
- சிற்பி பாலசுப்பிரமணியம்