வணக்கம் பஸ்தார்
இந்திய மாவோயிஸ்ட் இயக்கத்தின் வெளிவராத ஐம்பதாண்டு கால வரலாறு
ராகுல் பாண்டிடா எழுதிய வணக்கம் பஸ்தார் - பழங்குடியினரின் வாழ்வையும், இயற்கை மீதான அவர்களின் உரிமையையும் உணர்த்தும் நாவல். சமூகப் பிரச்சினைகள், போராட்டம் நிறைந்த கதை.
| Category | History |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 183 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
"ஏ கலக்டரே, ஏ அரசாங்கமே, ஏ தாசில்தாரே,
இந்த நிலத்தையும் இந்த வனங்களையும் பூமிக்கு கீழே இருக்கும் இந்த பொக்கிசங்களையும் நீதான் எங்களுக்கு கொடுத்தாயா? இயற்கையிடமிருந்து கிடைத்த, இந்த பரிசை நாங்க ஆயிரக்கணக்கான வருடங்களாக அனுபவித்து வருகிறோம்.
தாத்தாக்கள், பூட்டன்கள் காலத்திலிருந்து இது எஙகளுடைய சொத்து நீ யார் இதை எங்களிடமிருந்து பிடுங்க?
நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். எங்கள் உடம்பில் உயிர் இருக்கும் வரை அன்னை பூமியைக் காக்க போராடுவோம்…"
-ஆலியா மாஜ்ஹி, பெண் போராளி, ஒரிசா
