Skip to content

தமிழ்நாட்டு வரலாறு

சங்க காலம் முதல் திராவிட இயக்கங்கள் வரையான தமிழகத்தின் துல்லியமான விரிவான வரலாறு

கே. ராஜய்யன் எழுதிய தமிழ்நாட்டு வரலாறு - தமிழரின் பண்பாடு, வரலாறு மற்றும் அடையாளத்தை மறு கண்டுபிடிக்கும் ஒரு முழுமையான ஆய்வு.

Category History
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 517
Year 2017
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல் 40 ஆண்டுகால உழைப்பில் கிடைத்த அறுவடை. தமிழரின் மத – ஆன்மீகத் தத்துவத்தைத் திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன், இழந்துபோன தமிழ் அடையாளத்தை மறு கண்டுபிடிப்புச் செய்கிறது. களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல, அவர்களது காலத்தில்தான் குறளும், சிலம்பும், மேகலையும் உருக்கொண்டன. அது சமண – பௌத்தர் மேலோங்கியிருந்த காலமாதலால், இருண்ட காலமாக்கப்பட்டது என்கிறது. பழங்காலத்திலிருந்து, விடுதலை பெற்றது வரையிலான ஆட்சியதிகாரம் சார்ந்த வரலாற்றுடன் நின்றுவிடாமல், தமிழீழப் போராட்டம் வரையிலான நவீன வரலாற்றையும் சேர்த்து, தமிழரின் பண்பாட்டுக் கொடையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1800 – 1801 தென்னிந்தியக் கலகத்திலிருந்து தொடங்குகிறது என்று நிறுவுகிறது. பெரியார் உள்ளிட்ட வரலாற்று ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் சாதக – பாதக அம்சங்களுடன் பரிசீலித்து, துல்லியமானதும், முழுமையானதுமான ஒரு பதிவை நோக்கிய பெரியதொரு காலடிவைப்பை எடுத்துவைக்கிறது.