முருகன் – விநாயகன்
மூன்றாம் உலக அரசியல்
கௌதம சித்தார்த்தன் எழுதிய முருகன் - விநாயகன் - தமிழ் கடவுள்களின் வரலாறு, அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை ஆழமாக ஆராய்கிறது. முருகன், விநாயகன் பற்றிய புதிய புரிதல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 42 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தமிழ்நிலம் முழுமைக்குமான ஆதிக்கடவுள் முருகனைமெல்ல மெல்ல தமிழ்ப்பரப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒதுக்கி வைத்து, விநாயகனை தமிழ்ப்பரப்பு முழுமைக்குமான பொதுமைப்படுத்தப்பட்ட கடவுளாக மாற்றுவது. அப்படியான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும்போது அது எளிய தன்மையுடனோ, எளிய மானுட உருவத்துடனோ சித்தரிக்காமல், எளிய மக்களிடையே எதிர் வாதங்கள் எழும்பாமல் அச்சுறுத்தும்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். மட்டுமல்லாது, தங்களது வைதீகக் கருத்துக்களை ஓங்கி ஒலிக்கும் வல்லமையுடனும் ஒளிர வேண்டும். அதுமட்டுமல்லாது, தொடர்ச்சியாக அந்தப் பிம்பத்தை ஞானமார்க்கத்தின் முதன்மையான கடவுளாக உருவேற்றிக் கொண்டேயிருக்கவேண்டும் என்பதில் தீவிரமாய் முனைந்தனர். அந்தக் கட்டமைப்பு அப்போதைய தருணத்தில் தங்களது ஆதிக்கத்தை முன்வைப்பதற்காக அந்த பிம்பத்தைக் கட்டமைத்திருக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக நிகழும் காலச் சுழற்சியில் அது ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட பிம்பமாக மாறுகிறது. அதிகாரமாக மாறுகிறது. அதிகாரத்தைத் தக்கவைக்கும் அரசியலாக மாறுகிறது.