Skip to content

வகுப்பறை மொழி

மாலினி சீதா எழுதிய வகுப்பறை மொழி - கல்வி, விடுதலை மற்றும் வகுப்பறை அனுபவங்கள் குறித்த ஆழமான சிந்தனைகள் நிறைந்த புத்தகம். மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டி!

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 80
Year 2022
Format Paperback
Tags Philosophy and Thought

Description

“வகுப்பறை மொழி என்பது நான்கு சுவர்களுக்குள் மட்டும் நடைபெறுவது அல்ல” என்பவை ஆசிரியர் மாலினி தன் அனுபவத்தின் வழி தேடித் தரும் விடைகள். கல்வி எது? என்ற கேள்விக்கே ஓர் உறுதியான விடை நூலில் கிடைக்கிறது. ‘எது விடுதலை அளிக்கிறதோ அதுவே கல்வி’ என்கிறார் மாலினி. ஒரு விதத்தில் இது பாலோ பிரையர் குரல். விடுதலை என்பதற்கான பொருள் விரிந்து கிடக்கிறது. மாலினியின் அடுத்த புத்தகம் அந்த விரிந்த பொருளைத் தேடி அறிய வேண்டும்.

பூசி மெழுகும் சம்பிரதாயமான வார்த்தைகளுக்குள் சிக்காத புத்தகம் இது. மாலினி ஓர் ஆசிரியர். விருதுகள் பல பெற்றவர். அவர் பெற்ற விருதுகளுள் பெரிய விருது – ‘என் கனவு ஆசிரியர் திருமதி மாலினி அம்மா’ என்று அவரின் மாணவர்கள் அவரைக் கொண்டாடுவதுதான்! பல கேள்விகளை எழுப்பி விடை தேடுகிறது வகுப்பறை மொழி. எது வகுப்பறை? எது வகுப்பறை மொழி? என்பவை அடிப்படையான கேள்விகள். “எங்கு ஆசிரியர்களும் மாணவர்களும் கற்றுக் கொள்கிறார்களோ அதுவே வகுப்பறை.”