Skip to content

தமிழ்ச் சமூகப் பூசகர்கள்

பிடாரி வழிபாட்டில் வாழும் சாதி வரலாறு

மு. செல்வக்குமார் எழுதிய தமிழ்ச் சமூகப் பூசகர்கள் - தமிழ்ச் சமூக வரலாறு, பிடாரி வழிபாடு மற்றும் சாதிய முரண்களைப் பற்றிய பண்பாட்டு ஆய்வை வழங்குகிறது.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 240
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பிடாரி வழிபாடு சமூக வரலாறுகள் நிறைந்தது. இம்மரபில் அறியப்படாத சாதிய முரண்கள் பல பின்னப்பட்டுள்ளன. இவை யாவற்றையும் இந்த நூல் வெளிச்சமிட்டு விவாதிக்கிறது. தெய்வங்கள், பூசாரிகள் ஆகியோரின் சமய அரசியல் கதையாடல்கள் இதில் மீட்டுருவாக்கம் பெறுகின்றன. இந்த நூலின் ஆசிரியர் முனைவர் மு.செல்வக்குமார் காத்திரமானதொரு பண்பாட்டாய்வை முன்னெடுத்திருக்கிறார். அவர் கண்டுள்ள புரிதல்களும் கோணங்களும் கவனத்திற்குரியன. இது ஓர் ஒப்புமை இனவரைவியல். இம்முயல்வு மெச்சத்தக்கது.

நூலாசிரியரின் நுண்ணிய பார்வை, பன்முக நோக்கு. அகவய முறையியல், மாற்று எடுத்துரைப்பு முதலானவை அனைத்தும் நம் வசப்படுகின்றன. தமிழ்ச் சமூக வரலாற்றியலில் இது முற்றிலும் புதிய வழித்தடம். பண்பாட்டு அரசியல் பேசுவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூலிது.

* முனைவர் பக்தவத்சல பாரதி