Skip to content

பன்மாயக் கள்வன்

குறள் தழுவிய காதல் கவிதைகள்

ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய பன்மாயக் கள்வன் - காதலின் ஆழத்தையும், கவிதையின் இனிமையையும் அனுபவியுங்கள். இந்த நூல் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய வெளிச்சம்.

Category Poetry
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

காமம்... ஒரு தேயிலைத் தோட்டத்து கங்காணியைப் போல என்னைக் காவு கொள்கிறது. பேரணி முடிந்த நள்ளிரவின் சீரணி அரங்கம் போல நான் சிதைந்து கிடக்கிறேன். இந்தியத் துணைத் தேர்தல் ஆணையராக பணிபுரிந்த ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப- வின் பணிமொழி (அதாவது பணியில் இருக்கும் போது பேசும் மொழி - -ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை) கேட்டு மாவட்ட ஆட்சியர்கள் கை நடுங்குமாம். ஆனால் அவர் காட்டும் குறள் காதலன் பன்மாயக் கள்வன் தன் காதலியிடம் பேசும் மொழி முற்றிலும் வேறாக இருக்கிறது. இவர் கவிதைகளுக்கு குறளின் காமத்துப்பாலே வேராக இருக்கிறது. இருப்பினும் இவர் கவிதைகள் வேறாக இருக்கின்றன. வள்ளுவரின் பேரன்களின் சிந்தனை வளர்ந்து செழிக்க வேண்டும் என்றுதானே வள்ளுவம் ஆசைப்படுகிறது. தம்மில் தம்மக்கள் கவிவுடமை கன்னித்தமிழ் உலகுக்கு நன்று.

- வைகறை வாசகன் (சங்கர சரவணன்), வள்ளுவர் குரல் குடும்பம்