பல்வங்கர் பலூ
இ.பா.சிந்தன் எழுதிய பல்வங்கர் பலூ - கிரிக்கெட் வரலாறு, வீரரின் கதை, ஆங்கிலேயர் ஆட்சி கால உண்மைகள் ஆகியவற்றை அறிய ஒரு சிறந்த நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
கிரிக்கெட் எனும் விளையாட்டு எப்படித் தோன்றியது என்று வழக்கமான வரலாற்று நூலைப் போலத் தொடங்கும் இந்த நூல், பல்வங்கர் பலூ எனும் நாயகன் வந்த பிறகு சூடு பிடிக்கத் தொடங்குகிறது. பரபரப்பான கதை உள்ள நாவலைப் படிப்பது போல எழுதியிருக்கிறார் சிந்தன். இந்த நூல் மூன்று விதங்களில் உங்களுக்குப் பிடிக்கும். ஒன்று, கிரிக்கெட்டில் நீங்கள் இதுவரை கேள்வியே பட்டிராத ஒரு வீரரைப் பற்றிய அற்புதமான வரலாற்றைத் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். இரண்டு, ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்தபோது எப்படி இருந்தது நிலைமை, நம்மை எப்படி நடத்தினார்கள், நாம் விளையாடக்கூட அவர்களிடம் அனுமதி பெறும் சூழல் இருந்தது உள்ளிட்ட அதிர்ச்சியான உண்மைகளைத் தெரிந்துகொள்வீர்கள்.