நாட்டார் வழக்காற்றியலும் கம்யூனிஸ்டுகளும்
புலவர் செம்புலப்பரணியன் எழுதிய நாட்டார் வழக்காற்றியலும் கம்யூனிஸ்டுகளும் - கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பையும், நாட்டார் வழக்காற்றியல் பற்றிய புதிய கண்ணோட்டத்தையும் அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தோழர் புலவர் செம்புலப்பரணியன் அவர்கள் எழுதியுள்ள இச்சிறுநூல் மிகவும் சுவையான ஒரு புத்தகம். தமிழ் மொழிக்கு கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றியுள்ள பங்கை முற்றிலும் புதிய கோணத்தில் விவரிக்கும் நூலாக இதை எழுதியுள்ளார்.
வழக்கமாக இதுபோன்ற நூல்களில் மொழி வழி மாநிலங்களுக்கான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய மகத்தான பங்கைப் பேசுவார்கள். சட்டமன்றத்தில் முதன் முதலாகத் தமிழில் பேசிய கம்யூனிஸ்ட் தலைவர்களைக் குறிப்பிடுவார்கள். அந்தப் பழகிய பாதையில் நடைபோடாமல் இந்நூல் தனித்த பாதையில் நடைபோட்டுக் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பை முன் வைக்கிறது. அதுவே இந்நூலின் தனிச்சிறப்பு.