Skip to content

மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன?

எர்னஸ்ட் ஃபிஷர் எழுதிய மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன? - மார்க்சியத்தின் உண்மையான கருத்துக்கள், மார்க்சின் தத்துவத்தை தெளிவுபடுத்தும் ஒரு சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 312
Year 2013
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

மார்க்ஸ் அளவிற்கு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட சிந்தனையாளர் வேறொருவர் இல்லை. கடந்த 150 ஆண்டுகளாக அவர் பெயரைப் பயன்படுத்தப்படாத துறையேதுமில்லை. உலகெங்கும் எண்ணற்ற இயக்கங்கள் அவர் பெயரால் அவர் கற்பித்தலின்படி நடப்பதாகக் கூறுகின்றன. ஆளும் தரப்போ மார்க்சியத்தின் மரணத்தை  தினசரி ஜெபம் போல கூறிவருகின்றது. காலமும் மண்ணும் மூடமுடியாத மார்க்சை தவறான விளக்கங்கள் மறைந்துள்ளன. தவறான விளக்கங்களை அவரது எதிரிகள் மட்டுமல்ல; நண்பர்களும் தந்திருப்பதாகக் கூறும் எர்னஸ்ட் ஃபிஷர், தனது சுருக்கமான நூலில் மார்க்சின் முக்கியமான கருத்துகளை அவற்றின் பின்னணி காலச் சூழலோடு, மார்க்சின் சொந்த சொற்கள் கொண்டே விளக்குகின்றார்.